வாசிப்பு



வாசிப்பு

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"  என்பது சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனார் வாக்கு. இவ்வரிக்கு நமக்கான நன்மையும் நமக்கான தீமையும் நம்மாலன்றி பிறரால் வருவதல்ல, அதற்கு நாம் தான் பொறுப்பு என்பது  வெளிப்படையான விளக்கம்.
  ஆனால் தீதும் நன்றும் புத்தகம் தரும் என்பது திட்டவட்டமான உண்மை. ரஸ்கின் எழுதிய 'கடையனுக்கும் கடைத்தேற்றம்'(Unto This Last) என்ற ஒற்றைப் புத்தகம் சாதாரண மனிதனை மகாத்மாவாக மாற்றியது. ஹிட்லர் எழுதிய 'மெயின் கேம்ப்'(Main Kampf) என்ற நூல், ஜெர்மானிய படுகொலைக்கு வித்திட்டது. நல்ல புத்தகங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். தீய புத்தகங்கள் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.அதனால் புத்தகம் வாசிப்பது மட்டுமல்ல, எத்தகைய புத்தகங்களை வாசிக்கிறோம் என்பதும் மிக முக்கியமானது. அதனால்தான், விவேகானந்தர்  சொல்கிறார் "நீ எத்தகைய புத்தகங்களை விரும்பி படிக்கிறாய் என்பதைச் சொல் உன்னை பற்றி  நான் சொல்கிறேன் என்று. நாம் வாசிக்கும் புத்தகங்கள் தான் நமக்கான அடையாளம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  அதனால், நல்ல புத்தகங்களை வாசிப்போம். நல்ல சிந்தனைகளைப் பெறுவோம். நல்ல சமுதாயத்தை படைப்போம்.
நன்றி🙏
                                                                                                                  ம.பிரபாவதி

Comments

  1. மகிழ்ச்சி, வாழ்த்துகள்💐. நல்ல புத்தகங்களே சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமான விஷயம்.
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. உண்மை...புத்தகங்கள் தான் மனிதர்களின் நண்பன்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Yes it is really true. I hope that you would list out some good books too😊.

    ReplyDelete
  5. நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துக்கள் சிறந்த முயற்சி

    ReplyDelete
  7. Nalla pathivu..thodarnthu thamizhal inaivom....vazhthugal.

    ReplyDelete
  8. சரியான பாதையில் மற்றவர்களை கொண்டுசெல்லும் உன் எழுத்தும் எண்ணமும் வாழ்க..... தோழி....

    ReplyDelete
  9. புத்தகம் தீதும் நன்றும் தரும் என்பதற்கு அருமையான விளக்கம் - ஒரு புத்தகம் மகாத்மாவை உருவாக்கியது; ஒரு புத்தகம் ஒரு கொடுங்கோலன் உருவாக்கியது.

    ReplyDelete

Post a Comment