ஆங்கில இலக்கியப் பரப்பில் எப்படி ஷெல்லியும் கீட்சும் இரட்டையர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்களோ, அதுபோல தமிழ் இலக்கியக் கவிதை உலகின் இரட்டையர்கள் என்றால் அது ஒன்று பாரதி, மற்றொன்று பாரதிதாசன். தமிழ் இலக்கிய வானில் நிலவாகவும் கதிராகவும் அறியப்படுபவர்கள் இவர்கள். அதில் பாரதியைப் பற்றி சென்றப் பதிவுகளில் பார்த்தோம். இங்கு பாரதிதாசனின் அமரத்துவம் வாய்ந்த ஒரே ஒரு கவிதைப் படைப்பைப் பருந்துப் பார்வை பார்க்கலாம்.
தமிழ் வேறு! தான் வேறு இல்லை! என்று முழங்கிய அரிமா. கவிதை இலக்கிய வரலாற்றில் தனது அழுத்தமானப் பதிவுகளின் பாதிப்பால் தனக்குப் பின்னே ஒரு பாட்டுக் குயில்களின் பட்டாளத்தையே விட்டுச்சென்ற பாடுநிலா. திராவிட இயக்கத்தின் தனிப்பெருங் கவிஞர். உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவியப் பார்வையால், மானிட சமுத்திரம் நானென்று கூவு என்று உலகப் பொதுமையைப் பாடிய உயரிய கவி. உணர்ச்சி வெள்ளம் இவரது பாடல்கள் என்றால் அது மிகை அல்ல. சந்தநயம் இவரது பாடல்களில் சரளமாக விளையாடும்.
இயற்கையின் பின்னணியில், மானிட வாழ்க்கையைப் புலப்படுத்தி நின்றவை சங்க இலக்கியம். சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்கியது காதலெனும் உரிப்பொருளாகும். சங்ககாலம் தொட்டு சமகாலம் வரையில் காதலைப் பாடாத புலவனும் இல்லை, இயற்கையைக் கவியாக்காத கவிஞனுமில்லை. கவிஞன் என்று ஒருவன் தரணியில் உதயமானால், அவன் கட்டாயம் காதலையும் இயற்கையையும் பாடியே தீர வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று இலக்கிய உலகில் உள்ளது போலும். காதலும் நம் மண்ணுக்குப் புதிதல்ல, கவிஞனும் நம் மண்ணுக்குப் புதிதல்ல. தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து காதலும் இயற்கையும் கவிஞர்களால் பாடப்படுகிறது. இதில் பாரதிதாசன் தீட்டிய காதல், இயற்கை மீதான கவிதைகள் தனித்துவம் மிக்கவை.
‘உள்ளம் கவர்ந்தாளின் உள்ளத்தைத் தான் கவர்ந்து - வெள்ளத்தில் வெள்ளம் கலந்தென - விள்ளும் நிலைகண்டு மணம் புரிதல் வேண்டும்’ ஆணும் பெண்ணும் எவ்வாறு கருத்தொருமித்து காதலில் திளைத்து கடிமணங் கொள்ள வேண்டும் என்பதை இவ்வளவு இயல்பாக, செறிவாக வேறுயாரால் சொல்ல முடியும். ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து - நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் - கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் -கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ ?’ நிலவின் அழகை இப்படி வசீகரிக்கும் வார்த்தைகளால் வளர்த்தெடுக்க அவரால் தான் முடிந்தது.
வசந்தகாலக் காதலை வார்த்தைகளில் இறக்கி வைப்பதும், இளைஞர்களின் எண்ண ஓட்டங்களை எழுத்துக் கோர்வை ஆக்குவதும் இயல்பு. ஆனால் முதியோர் காதல் என்பது அப்படி அல்ல. ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்று அரிதானது. பாரதிதாசன், முதியோர் காதலை எவரும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில்,உயரிய கருத்தமைந்த ஓவியமாக்கி, புரட்சிக்கவிஞர் என்னும் தம் முத்திரைக்கு அச்சாரம் சேர்த்துக்கொண்டார்.
தள்ளாடும் நடை வந்தபோதும், வறண்டு போன நிலம்போல தேகம் மாறிய நிலையிலும், ஆயிரம் சுருக்கங்களால் அவள் முகம் கவர்ச்சி இல்லாத போதும், அவளது இருப்பு ஒன்றே போதுமானது. உயிரோடு இன்றும் என்னுடன் உயிர்த்து வாழ்கின்றாள் என்ற நினைப்பே எனக்கு இன்பமானது என்ற அவரின் முதியோர் காதல், உண்மைக் காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை, உயிர் இருக்கும் வரை அது தொடரும் வலிமையுடையது என்பதை உலகிற்கு உரக்கச்சொல்லும் காவியம்,
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
‘‘ இருக்கின்றாள்” என்ப தொன்றே. ( குடும்ப விளக்கு )
ம.பிரபாவதி

Super Prabha..nice comaricomp
ReplyDeleteExcellent compilation
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் மக்கள் மனதாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறார்கள். கற்காலம் முதல் இக்காலம் வரை காதல் என்ற ஒன்று அனைவரையும் கட்டிப் போட்டு கடந்து செல்கிறது. காதலினால் ஏற்பட்ட அன்பு கல்லறை செல்லும் வரை நம் மனதில் இடம் பிடித்திருக்கும். அதுபோல் கவிஞர்களுடைய கவிதைகளும் பாடல்களும் என்றுமே நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதை அவ்வப்பொழுது உங்களுடைய பதிவுகளால் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
ReplyDeleteபாரதியும், தாசனும் தமிழின் இரு விழிகள் அல்லவா...அருமை..தோழமையே
ReplyDeleteஆம் தோழமை.நன்றி நன்றி.
Delete. ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து - நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் - கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் -கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ ?’ .... இவ்வரிகளுக்கு ஈடு எதுவும் கூறுதல் இயலாது... இப்பதிவை வாசிக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி... நன்றி தோழி....
ReplyDeleteநன்றி தோழி...
Deleteசூப்பர்
ReplyDeleteArumai arumai thozhi...
ReplyDeleteநன்றி தோழி..
Deleteபாரதியின் தாசனுடைய காதலுக்கு மரியாதை.. அருமை சகோதரி
ReplyDeleteநன்றி சகோ....
DeleteIt true dear friend... the feeling of having someone to rely on is something which cannot be felt by everyone...
ReplyDeleteYes friend. Thank u
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete'காலத்தால் அழியாத காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள், கால ஓட்டத்தில் காணாமற் போய்விட்டனர் ' என்ற ஐயா தமிழருவி மணியன் கூற்று நெஞ்சில் நிழலாடுகிறது. சிறப்பான பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா...
Delete